Kogilavani / 2021 ஜனவரி 01 , பி.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
லிந்துலை பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட 8 தோட்டப்பகுதிகளில் 10 பேருக்கு, நேற்று (31) கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.துரைராஜ் தெரிவித்தார்.
இதனடிப்படையில் லிந்துலை, மெரயா, அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தில் உள்ள சென்ஜோன்ஸ், தங்ககலை, பிரஸ்வாட்டர், பெயாபீல்ட், டயகம, கவிலினா, மவுசாகலை, மற்றும் சின்ன மட்டுக்கலை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்ற உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று(31) இரவு வெளியான நிலையிலேயே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவர்கள், கொழும்பு, அவிஸ்ஸவாளை ஆகிய பிரதேசங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்கள் என்றும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மேற்படி 10 பேரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுசுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago