R.Maheshwary / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
லிந்துலை- லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் லயக்குடியிருப்பு ஒன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால், நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தற்போதும் தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
எனினும், ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .