Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
லிந்துலை, லெமினியர் தோட்டத்தில், மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வரும் ஏழு தொழிலாளர் குடும்பங்களுக்கும், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தனிவீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, மேற்படி தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, ஏழு தொழிலாளர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதுடன் இவர்கள், தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இவ்விடயத்தை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துலை அமைப்பாளரும் உபதலைவருமான வேலு சிவானந்தன், அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக, அமைச்சர் திகாம்பரம் 70 இலட்சம் ரூபாய் நிதியை, ஒதுக்கீடு செய்துள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026