Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நுவரெலியாவில் இருந்து பதுளைக்கு அரிசி ஏற்றிச் சென்ற போது, பள்ளத்தில் பாய்ந்த லொறியானது, நேற்று (07) பிற்பகல் கடும் முயற்சியின் பின்னர் மேலே கொண்டு வரப்பட்டது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி 5ஆம் திகதி 4 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு அருகில், வீதியில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள வீடொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி மாத்திரம் காயமடைந்துள்ளதாகவும், விபத்தில் வீடு பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியை மீட்ட பின்னர், அந்த வீட்டுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை பெறப்பட்டதுடன், விபத்தில் பாரியளவில் சேதமடைந்த வீட்டை சீர்செய்து திருத்துவதற்கு லொறியின் உரிமையாளர் இணக்கம் தெரிவித்ததாக நுவரெலியா பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதிக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
நுவரெலியா ஹக்கல வீதியில் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025