Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி
'எதிர்கால சந்ததி தொடர்பில் அதிகம் சிந்தித்து அதற்காகவே செயலாற்ற வேண்டும். நீங்கள் கோருவதெல்லாம் தருகிறேன் என்று வாக்குறுதியளிக்க நான் தயாராக இல்லை. ஏனெனில் நடைமுறைச் சாத்தியத்துக்கு ஒத்துவராததை உறுதியளிப்பதில் பயனில்லை' என இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் மேஜர் ஜெனரல் செய்யத் சாக்கீல் உஸைன் தெரிவித்தார்.
'வெளிவாரி வளங்களை பெரிதும் நம்பி இருக்காமல், மாடிக் கட்டடங்களை விஸ்தரிப்பது தொடர்பில் சிந்திக்காமல் இருக்கின்ற வளங்களைக் கொண்டு மிக உயர்ந்த பலன்களைப் பெறுவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பதே அனைவருடைய நோக்கமாகும்' என்றும் அவர் கூறினார்.
கண்டி, முஸ்லிம் வர்த்தக சங்கம் மற்றும் மத்திய மாகாண முஸ்லிம் லீக் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் அனுசரணையுடன் கணினி பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கண்டி, ஜின்னா ஞாபகார்;த்த மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'எதிர்கால சந்ததிகளான குழந்தைச் செல்வங்களின் நல்வாழ்வும் நல மேம்பாடுமே எமது முக்கியமான நாட்டமாகவும் இலட்சியமாகவும் இருக்க வேண்டும்.
இங்கு பயிற்சி பெறுகின்ற மாணவர்களின் ஆற்றலும் ஆர்வமும் திறமையும் பாராட்டத்தக்கவர்களாகவும் பெரும்மகிழ்ச்சிக்குரியதாகவும் உள்ளது. இந்த மத்திய பயிற்சி நிலையத்தை முன்னெடுத்துச் செல்வதில் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கமும் மத்திய மாகாண முஸ்லிம் லீக்கும் அளப்பரிய சேவையை ஆற்றி வருகின்றன. அது மென்மேலும் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை' என அவர் மேலும் கூறினார்.





7 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
55 minute ago
1 hours ago