2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

வாகனங்கள், சிகை திருத்தும் நிலையம் தீக்கிரை

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடதலவின்ன பிரதேசத்தில் இன்று அதிகாலை வாகனங்கள் இரண்டும்  ஒரு சிகை திருத்தும் நிலையமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

 வத்தேகம பொலிஸார் ரோந்துசேவையில் ஈடுபட்டிருந்த போது முடிவெட்டும் நிலையம் ஒன்று தீப்பற்றி முற்றாகச் சேதமடைந்தும் அதற்கு அண்மையில் மோட்டார் வாகனம் ஒன்று முற்றாக எரிந்த நிலையிலும் இருந்ததை அவதானித்துள்ளனர்.

இதேவேளை, உடதலவின்ன புகையிரத நிலையத்துக்கு அண்மித்த வியனமுல்ல பாதையில் ஒரு லொறி மீது தீயிட்டு எரிக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளபோதும் லொறி சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.

இது திட்டமிட்டு, ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .