2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீடு கையளிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கேகாலை, அரநாயக்கவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மஹிபால ஜனசஹன அமைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது  வீடு, மக்களின் பாவனைக்காக நேற்றுக் கையளிக்கப்பட்டது.

20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது குடியிருப்பை,  கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மக்களிடம் நேற்றுக் கையளித்தார்.

மேற்படி பிரதேசத்தில் வீடுகைள  அமைப்பதற்காக, அம்பதெனிய தோட்ட நிர்வாகம், 18 ஏக்கர் காணியை வழங்கியுள்ளது.

அரநாயக்க தேர்தல் தொகுதியில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 590 குடும்பங்களுக்கு,  மஹிபால ஹேரத் ஜன சாஹன அமைப்பு மற்றும் சுயாதீன அமைப்பு என்பன இணைந்து, வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X