Kogilavani / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து, தங்க ஆபரணங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட இலத்திரணியற் பொருட்களை திருடியதாக கூறப்படும் 27 வயது நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் திங்கட்கிழமை(4) கைதுசெய்துள்ளதுடன் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்;த ஒரு பிள்ளையின் தந்தையே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர், கடந்த சில தினங்களாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள பல வீடுகளை இரவு வேளைகளில் உடைத்து உட்புகுந்துள்ளதுடன் தங்க ஆபரணங்கள், மடி கணினிகள், டெப்கள் உள்ளிட்ட இலத்திரணியற் பொருட்களை திருடி கட்டுகஸ்தோட்டையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளார்.
சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலத்தின்படி கட்டுகஸ்தோட்டையிலுள்ள வர்த்தக நிலையங்களை பொலிஸார் சோதனை செய்தபோது, மேற்படி நபர் விற்பனை செய்த சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago