2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விதிகளை மீறியோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Sudharshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இனங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, விதிகளை மீறிய சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக மட்டும் 50ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களை மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகனச் சோதனை அதிகாரிகள், ஹட்டன் பகுதியில் வைத்து திடீர் சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது பணம் கொடுத்து பயணச்சீட்டு பெறாதவர்கள், நடத்துனர் அனுமதி பத்திரம் இல்லாமல் இருந்த நடத்துனர்கள்,

பஸ்ஸில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச்சென்ற சாரதிகளையும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தி குற்றங்களை இனங்கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சோதனையை தீபாவளி பண்டிகை முடியும் வரை நடத்தவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .