2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

வேதன விடயத்தை வலியுறுத்தி 'செல்பி' போராட்டம்

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்,கே.சுந்தரலிங்கம்

தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கான வேதனம்  10 அமெரிக்க டொலர்களாக வழங்க வேண்டும். அது வரை இலங்கை தேயிலையை  நுகர  வேண்டாம் என இலங்கை தேயிலையை பெறும் வெளிநாட்டவர்களுக்கு அழுத்தம் கொடுக்க போவதாக மலையக தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும், 'தொழிலாளர் அடிப்படை வருமானத்தை நீக்குவதை நிறுத்து' என்ற (செல்பி) எனும் தொனிப்பொருளில்  போராட்டம் ஒன்றை மலையகத்தில் மட்டுமன்றி, இலங்கை தேயிலையை நுகரும் சர்வதேச நாடுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் மலையக தேசிய முன்னணி தெரிவித்தது.

இவ்விடயம் தொடர்பில் செய்தியாளருக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று மாலை 03.30க்கு ஹட்டனில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.இதன்போதே மலையக தேசிய முன்னணி இவ்வாறு தெரிவித்தது.

இதன்போது கட்சியின் தலைவர் கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் கருத்து தெரிவிக்கையில்,

செல்பி போராட்டம் என்பது வெறுமனே கேலிகூத்தான விடயம் அல்ல செல்பி என்ற ஆங்கிலப்பதம் உணர்த்துவது ( SELFIE PROTEST )
('STOP ELIMINATING OF LABOUR FUNDAMENTAL IN COME ON EARNING') 'தொழிலாளர் அடிப்படை வருமானத்தை நீக்குவதை நிறுத்து' என்பதாகும்.

இதனடிப்படையில், தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயத்தை சர்வதேச நாடுகள் திரும்பி பார்க்க வேண்டுமென என்பதற்காக அழுத்தம் கொடுத்தே இப்போராட்டத்தின் முதற்கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

பெருந்தோட்ட கம்பனிகள் உள்ளூர் தேயிலையை ஏற்றுமதி செய்து வருமானங்களை டொலர்களிலேயே பெறுகின்றது. அதேப்போன்று டொலர் ஊடகவே சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பெறுந்தோட்ட பகுதிகளை அரசாங்கம் மீளப்பெற்று தொழிலாளர்களை அரச தொழிலாளர்களாக ஏற்க வேண்டும்.

இவ் அனைத்தும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை மனதில் நிறுத்தி நாம் இந்த போராட்டத்தை ஒவ்வொரு கிழமையும் உள்நாட்டிலும் இலங்கை தெயிலையை நுகரும் சர்வதேச நாடுகளிலும் அங்கு வாழ்கின்ற இலங்கை பிரஜைகளை ஒன்றினைத்து ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நாடாளுமன்ற முற்றம், மனித உரிமை அமைப்புகள் வெளிவிவகார அமைச்சுகளின் காரியாலயங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களிலும் செல்பி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தார்.

இதேவேளை, இப்போராட்டமானது அராங்கத்துக்கு எதிரானதாக அல்ல அத்தோடு தொழிற்சங்களின் சக்தியை குறைப்பதற்காகவும் அல்ல தொழிலாளர்களை தோட்ட கம்பனி நிர்வாகங்கள் மதிக்க வேண்டும். அத்தோடு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதை வெளிநாட்டவர்கள் பெருந்தோட்ட கம்பனி நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதை இலக்காக கொண்டே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .