2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் காயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

வெலிமடை, தம்பவின்ன பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் 17 வயதுடைய இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் கடேகெதர பேரவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த லக்மால் சத்துரங்க கருணாசேன என்பவரே உயிரிழந்துள்ளார்.

வெலிமடையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் பண்டாரவளையிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே பாதிப்படைந்துள்ளனர்.   

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ள வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .