2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக, திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், 37 வயது நபர், ஸ்தலத்திலே பலியானதாக, மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை, ரிதிகொடலிய பிரதேசத்தைச் சேர்ந்த, நிவ்ட்டன் டயஸ் என்பவரே, இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

அதிக வேகமாகப் பயணித்த வானொன்று, பாதையில் நடந்துச் சென்ற குறித்த நபர் மீது மோதியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், வானையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச் சென்றுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .