2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

விபத்தில் சிறுமி படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் – நுவெரலியா பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு அவிசாவளையிலிருந்து நுவரெலியா நோக்கி சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ்,  ஹட்டன் குடாகம பகுதியில் தேநீர் பருகுவதற்காக நிறுத்தப்பட்டது.  இதன்போது, குறித்த பஸ்ஸிலிருந்து இந்தச் சிறுமி இறங்கி வீதியை கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானார். இந்தச் சிறுமி மீது குடாகம பகுதியிலிருந்து ஹட்டன் பகுதி நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .