2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

விபத்தில் தாயும் மகளும் காயம்

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியசிரிகம பகுதியில், முச்சக்கரவண்டி ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து  விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் காயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியவில் இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா வனராஜா மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த தாயும் மகளுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

டிக்கோயாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி, தியசிரிகம பகுதியில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான காரணம் என்று நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .