2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் தொழில்நுட்ப அதிகாரி பலி

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை-மஹியங்கனை வீதி, கய்லகொட சந்தியில், செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், மஹியங்கனையைச் சேர்ந்த ஜயசிறி குணரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனையிலுள்ள நிறுவனமொன்றில், தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்றி வரும் இவர், தனது பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக, கய்லகொட சந்தியிலுள்ள மஞ்சட்கோட்டுக் கடவையை கடக்க முயன்றுள்ளார்.

இதன்போது அவ்வீதி வழியாக, மிக வேகமாக வந்த முச்சக்கர வண்டி, குறித்த நபர் மீது மோதியில் அவர் படுகாயமடைந்தார்.

மேற்படி நபரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றப் போதிலும் அவர் வழயிலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதியான 18 வயது இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .