Kogilavani / 2016 ஜூன் 13 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷெல்ட்டன், ஆர்.ரமேஸ்
நுவரெலியா பதுளை வீதி, சீதாவனராமய பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிவனு வேலுச்சாமி என்ற 62 வயது பெண் உயிரிழந்துள்ளதுடன் 27 வயது இளைஞர், காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவிலிருந்து லக்கிலேன்டுக்கு பயணித்த இ.போ.ச பஸ்ஸும் பண்டாரவளையிலிருந்து நுவரெலியா நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
முச்சக்கர வண்டியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸுடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணே உயிரழந்துள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதி கடும் காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2 minute ago
11 minute ago
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
11 minute ago
17 minute ago
28 minute ago