Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நீர்கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாவுக்காக, பயணித்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், புத்தாண்டு தினமான கடந்த 13ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.
வசந்தகால நிகழ்வுகளை கண்டுகளிப்பதற்காக, நீர்கொழும்பிலிருந்து சென்றுக் கொண்டிருந்த குறித்த சுற்றுலாப் பயணிகள், பகல் உணவுக்காக டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் சமைத்துக் கொண்டிருதனர். அந்த சந்தர்ப்பத்தின் போது அங்குள்ள மரத்தில் இருந்த குளவி கூடு, கலைந்து வந்து அவர்களை கொட்டியுள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணத்தில் 25 பேர் சென்றதாகவும், இதில் 6 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும், அதில் 2 பேர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாகவும், 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago