2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வகுப்பு நடத்திய அதிபர் கைது

எம். செல்வராஜா   / 2020 மே 04 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்திய  மடுல்சீமைப் பகுதியின் தமிழ்ப் பாடசாலை அதிபர் ஒருவரை, மடுல்சீமை பொலிசார் இன்று (04) கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பகுதியின் மாதோவ பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, அங்கு சென்ற பொலிஸார், வித்தியாலய அதிபரைக் கைது செய்துள்ளனர்.

மடுல்சீமைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த அதிபர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்றும் அவருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வித் திணைக்கள சுற்றறிக்கையை மீறி, வகுப்புக்கள் நடாத்தியமை கருதியே, இவ் அதிபர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .