Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஆ.ரமேஸ், துவாரஷான்
அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டம், வேவர்லியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் வசந்த மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் விசேட பூஜைகளும் சனிக்கிழமை (24) நடைபெற்றன.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான கே.கே.பியதாஸ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வசந்த மண்டபத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
வசந்த மண்டபத்துக்கான கட்டுமானப் பணிக்காக கே.கே.பியதாஸ எம்.பி, எட்டு இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் பழைய கோவிலில் விசேட பூசைகள் இடம்பெற்று புதிய கோவிலுக்கான பாற்குட பவனி இடம்பெற்றதுடன் விசேட யாக பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்துக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
அத்துடன் பசுமலை நகரின் ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையில், விகாரதிபதி பலாங்கொடை ஞானசார தேரரின் தலைமையில் வழிபாடுகளும் நடைபெற்றன.
போட்மோர் வேவர்லி தோட்டத்தின் மக்கள், பரம்பரையாக வணங்கிவந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்திருந்த இடத்தில், இராமர் கோவில் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக அவ்விடத்திலிருந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், 2015ஆம் ஆண்டு வசதிமிக்க இடத்துக்கு மாற்றப்பட்டதுடன், அங்கு கோவில் அமைப்பதற்கானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கோவிலின் நிர்மாணப்பணிகளுக்குப் போதிய நிதி இல்லையென்று இதனால் நிர்மாணப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகச் சபையும் தோட்ட மக்களும் தெரிவித்துள்ளனர்.
தோட்ட மக்கள், வெளிமாவட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள் உட்பட உள்ளூர் வர்த்தகர்களின் நிதியுதவியுடனேயே கோவிலின் 50 சதவீதமானக் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும் கோவிலின் இராஜகோபுரம், வசந்த மண்டபம், இன்னும் சில கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கு நிதிப்பற்றாக்குறைக் காணப்படுவதாக, கோவிலின் நிர்வாகச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே கோவிலின் அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களின் உதவியை கோவிலின் நிர்வாகச் சபை நாடியுள்ளது.
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
51 minute ago
2 hours ago
3 hours ago