Kogilavani / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
லபுக்கலை கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள வட்டப்பாறையிலிருந்து விழுந்து காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 10 வயது சிறுவன், நேற்றுப் புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்விக் கற்றுவந்த மணிமாலன் பானுஷன் என்ற 10 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மேற்படி சிறுவன் கடந்த 16 ஆம் திகதி, தனது நண்பர்களுடன் வட்டப்பாறைப் பகுதிக்கு விளையாடச் சென்றபோது காலிடறி விழுந்து காயமடைந்துள்ளான். சிறுவன் உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கண்டி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன், நேற்றுப் புதன்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவன் லபுக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்விக் கற்கும் மாணவன் என்பது குறிப்பிடதக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago