2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

வட்டவளையில் கார் விபத்து

Niroshini   / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், மு.இராமசந்திரன்

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்று வட்டவளை நகரத்துக்கு அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காரில்  பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .