Kogilavani / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்
வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் மேலும் 10 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அம்பகமுவ பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேற்படி தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
இன்று (3) வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே 10 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வட்டவளை தோட்டத்தில் 07 பேருக்கும் வட்டவளை நகரப் பகுதியில் மூவருக்குமே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலை தொடர்ந்தும் மூட்டப்பட்டுள்ளதுடன் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 72 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago