Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை புகையிர நிலையத்துக்கு அருகில், இரண்டு இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள முற்பட்டமைத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத சேவைகள் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வட்டவளைப் புகையிரத நிலையத்துக்கு அருகில், பொடிமெனிக்கே ரயிலும் மற்றுமொரு விசேட ரயிலின் இயந்திரம் ஒன்றும், ஒரே வழித்தடத்தில் நேரெதிர் திசையில் பயணித்துள்ளன.
எனினும், இதன்போது எந்தவித அனர்த்தங்களும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த புகையிரதங்கள் பயணித்த விதம் தொடர்பில், தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago