Editorial / 2025 மார்ச் 17 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

" உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும்., தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம்” என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர் இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார் படுத்தப்படும்.
ஆகவே எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது அதேவேளையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago