2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

விபத்துக்குள்ளாகி 14 நாட்களுக்கு பிறகு வைத்தியர் மரணம்

Janu   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில்  பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர், தனியார்  பேருந்தொன்றில் இருந்து விழுந்து பலத்த  காயங்களுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை (01) அன்று உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவர் இரத்தினபுரி, மொரகஹாயட்ட, லென் கெட்டிய வீதியைச் சேர்ந்த   32 வயதுடைய  பி. மதரா மதுபாஷினி  என்ற ஒரு குழந்தையின் தாயார் என தெரியவந்துள்ளது.

 குறித்த வைத்தியர் கடந்த மாதம் 19 ஆம் திகதி அன்று, தனது வேலையை முடித்துவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, ​​மட்டக்களப்பு -  கொழும்பு பிரதான வீதியில் உள்ள பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து  பேருந்தில் இருந்து விழுந்துள்ளார்.

 முச்சக்கர வண்டியொன்று திடீரென வீதியை கடக்க  முயன்ற போது பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்ட நிலையில் போது  வைத்தியர் பேருந்தின்  கதவு அருகில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .