Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வியாழக்கிழமை (02) முற்பகல் பல்லேகலை இராணுவ முகாமிற்கு அருகில் வைத்து பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இக்கோர விபத்தில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு மாணவர் பலத்த காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புனித சில்வெஸ்டர் கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி பயிலும் நெதுல நிம்தினு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் வித்தியார்த்த கல்லூரி அணிகளுக்கு இடையிலான 66 ஆவது வருடாந்த மகா கிரிக்கெட் போட்டி (Big Match) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது.
இரு பாடசாலைகளினதும் அதிபர்களுடன் கலந்துரையாடிய மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் முன்வைத்த ஆலோசனையின் பேரிலேயே இப்போட்டியை நிறுத்துவதற்கு அந்தந்த பாடசாலை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

27 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
41 minute ago
1 hours ago