2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியில் 9,212 பேர் பாதிப்பு

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியினால் 2,556 குடும்பங்களைச் சேர்ந்த 9,212 பேர் பாதிப்படைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கண்டி, யட்டிநுவர பிரதேச செயலகப் பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1,260 பேரும் அக்குரனை பிரதேச செயலகப் பிரிவில் 490 குடும்பங்களைச் ​சேர்ந்த 1,100 பேரும், கலகெதரை பிரதேச செயலகப் பிரிவில் 155 குடும்பங்களைச் ​சேர்ந்த 597 பேரும், கங்கஇஹலகோரல பிரதேச செயலகப் பிரிவில் 656 குடும்பங்களைச் சேர்ந்த 2,478 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கியுள்ளதாகவும், தற்போது ​மழை பெய்வதனால் குறித்த நிலைமை சீராகுமென  நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X