2026 மே 09, சனிக்கிழமை

dd

வரட்சியால் தேங்காய், மரக்கறிகளின் விலை அதிகரிக்கும்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திக அருணகுமார

மாத்தளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, தேங்காய், மரக்கறிகளின் விலை அதிகரிக்கக் கூடும் என, மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் ம​ழையின்மையால், தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளது என்றும் எனவே, இதனால் தேங்காயின் விலையின் அதிகரிப்பைத் தவிர்க்க முடியாது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாத்தளை மாவட்டத்திலுள்ள மரக்கறி உற்பத்தியாளர்களும், பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்னர் என்றும் இதனால், தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மழை அல்லது நீரை எதிர்பார்த்து செய்யப்படும் உற்பத்திகள், தற்போது பீடைத்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதெனவும் விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .