2026 மே 14, வியாழக்கிழமை

dd

வரட்சியால் வாழ்வாதாரம் பாதிப்பு; தொழிலாளர்கள் நிர்க்கதி

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான், எஸ்.சதிஸ்

மலையகத்தில் நீடித்துவரும் வரட்சியான வானிலை காரணமாக, பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில், தேயிலைத் தளிர்கள் கருகி வருவதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானத் தோட்டங்களில், தொழிலாளர்களுக்கான வேலை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், கொழுந்து நிறையும் குறைவடைந்துள்ளதெனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

அதிகாலை வேளையில், கடுங்குளிரும் அதிக பனியும் பொழிவதால், தேயிலைச் செடிகளில் கருகிப் போய்யுள்ளன என்றும் இதனால் தேயிலைக் கொழுந்தின் விளைச்சல் குறைவடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகங்களால், வாரத்தில் 7 நாள்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்ட நிலையில், வரட்சி காரணமாக தற்போது 3 அல்லது 4 நாள்கள் மட்டுமே, வேலை வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாதாந்த வருமானம் இம்மாதம் குறைவடைந்ததால், குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாதிப்பு,  மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால்,  வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, அரசாங்கம் முன்வர வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .