2026 ஜனவரி 21, புதன்கிழமை

வர்த்தக நிலையங்களை மூடுமாறு பணிப்பு

Kogilavani   / 2021 மே 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொதுமக்களின் நலன்கருதி, பொகவந்தலாவை நகரில் இன்று (18) வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களைத் தவிர ஏனைய விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டதால், அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரிக்கப்பட்டதையடுத்து, பொகவந்தலாவ நகரமும் முடக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களை மட்டும் இரண்டு மணத்தியாலங்கள் திறப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கினர்.

எனினும் ஏனைய வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்த விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்டப் பகுதிகளில், கொரோனா தொற்றினால்  ஒரே வீட்டில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 226 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,  பொகவந்தலாவை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  10 கிராம அலுவலர் பிரிவுகள், நேற்று முன்தினம் (17) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X