2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வலப்பனை பாதைக்கு விடிவு

Kogilavani   / 2021 ஜனவரி 08 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.பாலேந்திரன்

வலப்பனை மஸ்பன்ன பாதையைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் வலப்பனை தொகுத உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹிரன்யா ஹேரத் உறுதியளித்தார். 

மேற்படிப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், வலப்பனை, மடுல்ல, மொரகொல ஊடாக மஸ்பன்னை வரை காணப்படும் பாதையின் நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

பாதை புனரமைப்பின்றிக் காணப்படுவதால், பிரதேச மக்கம் பாரிய போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்று, அப்பகுதியின் விகாராதிபதி ஹிரன்யா ஹேரத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

பாதையைப் புனரமைப்பதுத் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதுடன், தனிப்பட்ட முறையிலும் கவனம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X