2026 மே 09, சனிக்கிழமை

வலப்பனையில் பிரதேச செயலகம் அமைக்கும் பணி இடைநிறுத்தம்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 

வலப்பனையில் உப பிரதேச செயலகம் அமைக்கும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாகவும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதுத் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

நுவரெலியா- வலப்பனைத் தேர்தல் தொகுதியில், மேலதிகமாக அமைக்கப்படவுள்ள பிரதேச செயலகத்தை, இராகலையில் அமைக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், அதுத் தொடர்பிலான  இரண்டு பக்கங்கள் அடங்கிய மனுவொன்றும், நுவரெலியா மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமாரவிடம், இன்று (12) கையளிக்கப்பட்டது.

வலப்பனை பிரதேசசபை உறுப்பினர் த.ஜனார்த்தனன், புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிசக் கட்சியின் பிராந்திய செயலாளர் வெ.மகேந்திரன் உள்ளிட்ட இலங்கை மலையக மன்ற உறுப்பினர்கள் அடங்கியக் குழுவினர் இந்த மனுவை கையளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர், வலப்பனைத் தேர்தல் தொகுதிக்கு மேலதிகமாக ஒதுக்கப்பட்ட பிரதேச செயலகம் தொடர்பில், பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில், ஏகப்பட்ட முறைப்பாடுகளும் தனக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்புதிய பிரதேச செயலகம் அமைப்பதுத் தொடர்பில் ஏற்பட்டுள் சர்சைகளுக்குத் தீர்வுக் காணும் வகையில், வலப்பனை நகரில் பிரதேச செயலகம் அமைக்கும் பணிகளை, பொதுத்தேர்தல் முடிவு பெறும் வரை இடைநிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தார்.

வலப்பனைத் தேர்தல் தொகுதியில் மற்றுமன்றி, ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியிலும் அமைக்கப்பட உள்ள பிரதேச செயலகங்களை,  உரிய இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வலப்பனைத் தேர்தல் தொகுதிக்கான பிரதேச செயலகத்தை, இராகலையில் அமைப்பதற்கு விடுத்த கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் என்றும்  உறுதியளித்தார்.

இந்நிலையில், இராகலை நகரில் புதிய பிரதேச செயலகத்தை ஆரம்பிக்கும் வரையில் இராகலை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய இவ்விடயம் குறித்து அரசாங்கத்துக்கு வழங்கிவரும் அழுத்தத்தைக் கைவிடப்போவதில்லை என்று, இலங்கை மலையக மன்றம், புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிசக் கட்சியின் பிராந்திய செயலாளர் வெ.மகேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .