2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வலப்பனையில் வேலைத்திட்டம்

Janu   / 2024 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உள்ளடங்கிய சேவை வழங்கல் மூலம் நிலையான சமாதானம்" எனும் தொனியில் இலங்கை சமாதான பேரவை வலப்பனை பிரதேச மக்களின் கருத்தினை கேட்டறியும் வேலைத்திட்டம் ஒன்றை வலப்பனையில் நடத்தியது. 

 மலையக சமூகத்தின் பொது சேவைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேன்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு  நேரடியாக கண்டறியப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ளும் வேலைத்திட்டமாக இந்த நிகழ்வு  வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

இலங்கை தேசிய சமாதானப் பேரவை ஏற்பாட்டில் கண்டி மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இரேஷா உதயனி மற்றும்  இலங்கை தேசிய சமாதானப்   பேரவை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ஆயிஷா ஜெயவர்த்தன ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு வலப்பனை ஓஸ்லீன் விடுதியில் இடம் பெற்றது.

இதில் சப்ரகமுவ பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மற்றும் சமூக சேவை திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் ரவீந்திர சந்திரஸ்ரீ பல்லியகுருகே மற்றும் இலங்கை சமாதான பேரவை திட்ட முகாமையாளர் சாந்த டி பத்திரன ஆகியோர் விரிவுரையாளராக கலந்து கொண்டார்.

மேலும் அரசாங்க திணைக்கள அதிகாரிகள்,அரசியல் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள்,சமூக சேவையாளர்கள், இளைஞர் யுவதிகள் உட்படமொழி பெயர்ப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலங்கை சமாதான பேரவை அனுசரணையுடன் சுற்றுச் சூழல் மற்றும் சமூக மேம்பாட்டு தகவல் மையத்தின் ஆதரவுடன்  சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளடங்கிய சேவைகளை பகிர்ந்தளித்தல்  எனும் உயர்தர சான்றிதழ் கற்கை மேற்கொள்ளும் 10 அரசு அலுவலர்களால் இரத்தினபுரி பிரதேச தோட்டப் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான  தகவல்கள் பகிரப்பட்டன.

 அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட வலப்பனை பிரதேச மக்களின் கருத்துக்கள் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற உள்ள இலங்கை தேசிய சமாதான பேரவை தேசிய மாநாட்டில் பிரேரனையாக முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆ.ரமேஸ்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X