Editorial / 2019 நவம்பர் 01 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாக, இரத்தினபுரி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சுரங்க அம்பகஹ தென்னவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிலைமை பரவலாகக் காணப்படுவதுடன், விசேடமாக ஓப்பநாயக்க, ஹுனுவல, ஹல்லின்ன, அக்கரல்ல, பெல்மதுளை, பலாங்கொடை ஆகிய பகுதிகளில் இந்நடவடிக்கைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
பெரும்பான்மை இன மக்களின் வாக்காளர் அட்டைகளை அவரவர், வீடுகளுக்குச் சென்று பொறுப்புடன் கையளிக்கும் தபால் விநியோகஸ்தர்கள், தோட்டத் தொழிலாளர்களின் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதில், அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தபால் விநியோகஸ்தர்கள், தாங்கள் விரும்பிய நேரங்களில், தோட்டத் தொழிலாளர்களை ஓர் இடத்துக்கு அழைத்து, வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதாகவும் அந்த இடத்துக்கு வரத் தவறும் தொழிலாளர்களின் வாக்காளர் அட்டைகளைக் கொடுக்காது, திரும்பிச் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்களில் சிலர், தோட்டங்களில் வசித்தாலும் பெரும்பாலானவர்கள் நகர்ப்புறங்களிலும் நாட்டுப்புறங்களிலும் தொழில்களுக்குச் செல்கின்றனர் என்றும் எனவே தபால் விநியோகஸ்தர்கள் அழைப்பு விடுக்கின்ற நேரங்களில், அதிலும் உரிய நேரத்துக்குள் அவர்கள் குறிப்பிடும் இடங்களுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்வது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும் என்றும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பாலான தோட்டங்களில், கணிசமான வாக்காளர்களே, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்படுகிறது.
57 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
5 hours ago
6 hours ago