மொஹொமட் ஆஸிக் / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு, நாடளாவிய ரீதியில் “மினிலெப்” எனும் சிறு பரிசோதனைக் கூடங்களை அமைக்க, ஏற்றுமதி விவசாயதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தற்போது 90 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் அபிவிருத்தித்துறைப் பணிப்பாளர் ஜனக லின்தர, இன்று (22) தெரிவித்தார்.
கண்டி கெட்டம்பேயிலுள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்கள காரியாலத்தில் வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஏற்றுமதி வாசனைத் திரவியங்களது விலைகள் குறைந்து கொண்டு செல்வதாலும் அதைத் தடுத்து உற்பத்தியாளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் வகையிலும், மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நடைமுறையில் நாடளாவிய ரீதியில் உற்பத்தியாகும் மிளகு, கராம்பு, ஏலம், கோப்பி உள்ளிட்ட மசாலாப்பொருள்கள், வாசனைத் திரவியங்களில் 90 சதவீதமாவை, வீட்டுத் தோட்டங்களிலே உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும் அவற்றின் தர நிர்ணயத்தில், சில குறைபாடுகள் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இருப்பினும், தர நிர்ணயமானது, அவற்றின் விலையில் பாரிய பாதிப்பைச் செலுத்தி வருவதாகவும் அத்துடன் தரம் குறைவடைவதன் காரணமாக, ஜரோப்பிய சந்தைகளினூடாக அதிக வருமானத்தை ஈட்டும் நிலை இல்லாமல் போய் வருவதாகவும் இதனால், உற்பத்தியாளர்கள் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கூறினார்.
தனியார் துறையில் இவ்வாறான ஆய்வுக் கூட வசதிகள் இருந்தபோதும், அவர்கள் அதிகளவு கொடுப்பனவுகளைப் பெறுவதன் காரணமாக உற்பத்தியாளர்கள் பாதிப்படைகின்றனர் என்றும் இதைத் தடுக்கும் வகையிலேயே, மேற்படி “மினிலெப்” திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது, நாடளாவிய ரீதியில் 90 நிலையங்களிலும், பயிற்றப்பட்ட அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் உற்பத்தியாளர்களது மாதிரிகளை, அவர்கள் பரிசோதித்து அறிக்கையிடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
59 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago