2026 மே 09, சனிக்கிழமை

’வாசிப்புப் பழக்கம் குறைகிறது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

மத்திய மாகாணத்தில், பாடசாலை மாணவர்களுக்கு இடையில் வாசிப்புப் பழக்கம் குறைவடைந்து வருவதாக, கல்வியல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரும்பாலான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், வாசிப்புப் பழக்கத்திலிருந்து விலகியுள்ளனர் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அலைபேசிகளின் பாவனை அதிகரிப்பு, வீடுகளில் தொலைக்காட்சி பாவனை, சமூகவலைத்தளங்களின் பாவனை என்வற்றால் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலையிலுள்ள நூலகங்கள், பொதுநூலகங்களைப் பயன்படுத்தும் மாணவர்களின் தொகை குறைவடைந்துள்ளதாகவும் இதனை அடிப்படையாக வைத்தே, மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைவடைந்துவருதை ஊர்ஜிதப்படுத்த முடிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பாடசாலைகளிலுள்ள நூலகங்களை, மாணவிகளே அதிகம் பயன்படுத்துவதாகவும் ஆண் மாணவர்களில் சொற்ப அளவிலானோரே நூலகத்தைப் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காடப்படுகிறது.

இந்நிலைமை தொடருமாயின் வாசிப்புப் பழக்கத்தைக் கைவிடும் நிலை ஏற்படும் என்றும் இது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் ஆரோக்கியமானச் சூழலை ஏற்படுத்தாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வாசிப்பும் தேடலுமே ஒரு மனிதனை பூரணப்படுத்துகிறது என்றும் எனவே மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு, பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .