Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை, பார்க் தோட்டத்திலுள்ள வீடொன்றில் வளர்த்து வந்த வான் கோழி, புறாக்கள் மற்றும் சேவல்களைத் திருடினர் என்றக் குற்றச்சட்டில் கைதுசெய்யப்பட்ட நான்கு சிறுவர்களை, கண்டி வேரவெல சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், எதிர்வரும் 22ஆம் திகதிவரை தடுத்து வைக்குமாறு, நுரெலியா நீதவான் நீதிமன் நீதவான் பிரமோத ஜெயசேகர,நேற்று (17) உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் மற்றுமொரு (32 வயது) நபரை, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
தனது வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வான் கோழி, 20 புறாக்கள், ஐந்து சேவல்களை, குறித்த ஐவரும் திருடினர், என்று வீட்டின் உரிமையாளர், கந்தப்பளை பொலிஸில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார். வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உரிமையாளர் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.
திருடப்பட்ட பறவைகள் அனைத்தும் பறக்கவிடப்பட்டுள்ளதாக, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
25 minute ago
1 hours ago
1 hours ago