ஆ.ரமேஸ் / 2020 மார்ச் 16 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில், மாபெரும் சிரமதானப் பணியொன்று, நேற்று (15) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், அவரது நேரடிக் கண்காணிப்பின் கீழ், சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மேற்படித் தோட்டத்தில், மிக நீண்ட காலமாக துப்பறவின்றி காணப்பட்ட வாய்க்கால்கள் சுத்திகரிக்கப்பட்டதுடன், பாதை ஓரங்களில் குவிந்துக் கிடந்தக் குப்பைகளும் அகற்றப்பட்டன.
நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெருந்தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் அதுத் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தியுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.
இதன்போது நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட நுவரெலியா பிரதேச சபையின் ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .