2026 மே 09, சனிக்கிழமை

dd

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏதுவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் கிராம சக்தி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில், நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, பல்வேறு வேலைத்திட்டங்களை வகுத்து, அதன் மூலம் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் சுயதொழிலை ஊக்குவிக்க, நுவரெலியா மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்களுக்கு, திட்ட வரைபை, இம்மாதத்துக்கள் சமர்ப்பிக்குமாறு, இதன்போது அமைச்சர் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .