Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த கினிகத்தேன கடவளை விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஒன்று கூடல் நிகழ்வு, எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9 மணிக்கு, கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, அதிபர் டி. தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் கல்லூரியின் கல்வி, இணைப்பாட விதானச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கான கலந்துரையாடலை மேற்கொண்டு தேவையான ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரியுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் பெற்றுக் கொள்வதற்கான விடயங்கள் இந்த ஒன்று கூடலில் விஷேட அம்சமாக இடம்பெறவுள்ளன.
அத்தோடு, பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்தவர்களாக சேர்ந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்கான திகதியும் தீர்மானிக்கப்படவுள்ளது. எனவே, கல்லூரியின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாமல் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago