Freelancer / 2023 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை வீரியபுர பகுதியில் உள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 65 கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
அத்தோடு 56 வயதுடைய வீரியபுர பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் விசேட அதிரடிப் படையினர் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். R
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026