2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Kogilavani   / 2021 ஜனவரி 21 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சப்ரகமுவ மாகாணத்தில், பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின குறைபாடுகளை அறிவிப்பதற்காக,  0452230557, 0704386109 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாண தனியார் போக்குவரத்து அதிகாரசபை, இந்த இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதற்கமைவாக, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களில் நிலவும் குறைபாடுகளை, பயணிகள் மேற்படி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X