2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

விடுமுறை காலத்தில் பதுளைக்கு விசேட ரயில் சேவை

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை விடுமுறை காலத்தில், கொழும்பிலிருந்து பதுளைக்கும் பதுளையில் இருந்து கொழும்புக்கும் விசேட ரயில் சேவையொன்று,   இன்று (13) முதல் ஞாயிற்றுக்கிழமை (15) வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி ரயிலானது, இன்று (13) தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக, அத்திணைக்களத்தின் அதிகாரி வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இதற்கமைவாக, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மாலை 7.35க்கு பதுளை நோக்கிப் புறப்படும் ரயில், அதிகாலை 4.55 மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை அடையும் என்றும்  பதுளையிலிருந்து இரவு 8.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கிப் பயணிக்கும் ரயில், அதகாலை 4.45 மணிக்கு, கோட்டை ரயில் நிலையத்தை அடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .