2026 மே 09, சனிக்கிழமை

விதை உருளைக் கிழங்கு உற்பத்தி: இறக்குமதிக்கு ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

 

நுவரெலியா மாவட்டத்தில், பெரும்போகத்துக்காக உற்பத்தி செய்யப்படும் விதை உருளைக் கிழங்கை இறக்குமதி செய்யும் ஓசியஸ் மார்க்கட்டிங் பிரைவட் லிமிடெட் நிறுவன நிர்வாக முகாமையாளர் சுமீத் டி சில்வா, ஒல்லாந்து நாட்டிவுள்ள ஸ்டெட் நிறுவனத்தின் விதை உருளைக் கிழங்கு விற்பனை முகாமையாளர் ஜோன் மரினீசெனனுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நுவரெலியாவில், பெரும் போகத்துக்காக உற்பத்தி செய்யப்படும் விதை உருளைக் கிழங்கு, வருடம்தோறும் பல வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதில், ஓசியஸ் நிருவனம், வருடாந்தம்  பல மில்லியன் ரூபாய்க்கு ஒல்லாந்து நாட்டிலிருந்து பெருந்தொகையான விதை உருளைக்கிழங்கை இறக்குமதி செய்து,  இலங்கை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றது.

எதிர்வரும் வருடங்களிலும், நல்ல தரமுள்ள விதை உருளைக்கிழங்கை இலங்கைக்குக்  கொண்டு வருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை நுவரெலியாவில் கைச்சாத்திட்டுள்ளனர்.

மேலும் இந்த ஒப்பந்தம் மூலம், எதிர்வரும் காலங்களில் நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரமல்லாது, ஏனைய மாவட்டத்தில் கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் தரமான விதை உருளைக்கிழங்கு பெற்றுக் கொடுக்க முடியும் என்று, சுமீத் டி சில்வா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .