2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

வித்தியாசமாக திருடிய மூன்று பெண்களுக்கு வலை

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி சனிக்கிழமை 11 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு பயணித்த  அரச பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் 3 பவுன் எடை உள்ள தங்க சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளது என திம்புள்ள- பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 ஸ்டோனிகிலிப் தோட்ட சிறுவர் காப்பக உத்தியோகத்தரே முறைப்பாடு செய்துள்ளார்.

 பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தனக்கு அருகில் கர்ப்பிணி அமர்ந்திருந்தார்., குழந்தை ஒன்றை வைத்து கொண்டு இருந்த பெண், மற்றொரு பெண் தனக்கு அருகில் நின்று கொண்டு பயணித்தனர்.     பேருந்து சற்று பிரேக் செய்த வேளையில் என் மீது இரண்டு பெண்களும் சரிந்துவிட்டனர்.

அந்த மூன்று பெண்களும் டெவோன் பகுதியில் வைத்து பேருந்தில் ஏறி  கொட்டகலை அரச வைத்தியசாலை பகுதியில் இறங்கி சென்று உள்ளனர்.  சற்று தூரம் சென்ற பின்னர் தனது கழுத்தில் இருந்த சங்கிலி இல்லாமை தெரிய வந்தது  பேருந்தில் இருந்து உடனடியாக இறங்கி முச்சக்கர வண்டி எடுத்து அப் பகுதியில் தேடியும் அவர்கள் அகப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அவர்கள் பற்றி விரிவாக தேடுதல் நடவடிக்கையில் பத்தனை பொலிஸார். மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

எஸ்.கௌசல்யா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .