Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
பரீட்சை வினாத்தாள்களைத் திருடினர் என்றக் குற்றச்சாட்டில், கல்வி பொதுத்தர சாதாரணத்தரத்தில் கல்விப்பயின்று வரும் மாணவர்கள் இருவரை, மஸ்கெலியா பொலிஸார், இன்று (26) கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றின் மாணவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் அதிபர் அலுவலகத்தில் பொதியிடப்பட்ட நிலையில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்தன என்றும் எனினும் பொதி உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்து, அது தொடர்பில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைதுசெய்துள்ளனர் என்று தெரியவருகிறது.
அதிபர் காரியாலயத்தின் ஜன்னல்கள் திறந்து இருந்தன என்றும் ஜன்னல் வழியாக உள்நுழைந்து, பொதிசெய்யப்பட்டிருந்த பரீட்சை வினாத்தாள்களை மேற்படி இருவரும் திருடியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago