Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமனசிறி குணத்திலக்க
மொனராகலை-பிபிலை வீதி, 15ஆம் மைல்கல் பகுதியிலுள்ள விகாரைக்கு முன்பாக, நேற்று (11) இடம்பெற்ற விபத்தில், இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று, மெதகம பொலிஸார் தெரிவிதத்னர்.
மெதகம பகினிகஹவெல, அமுனேகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த டி.எம்.குலதிலக (38) இன்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேற்படி இராணுவவீரர் பயணித்த மோட்டார் சைக்கிளை, கெப் ரக வாகனம் ஒன்று மோதித் தள்ளியதில், அவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் அவரை உடனடியாக மெதகம வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கெப் ரக வாகனம் மின்சாரத்தூண், தென்னை மரம் என்பவற்றையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
கெப் ரக வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அந்த வாகனத்திலிருந்த மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுளு்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago