2025 மே 01, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம் ; போதையில் இருந்த இளைஞன் கைது

Janu   / 2025 ஜனவரி 01 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த ஒருவர் மீது மோதியதில் காயமடைந்த பாதசாரி டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த விபத்து புதன்கிழமை (01) அன்று மாலை 4 மணியளவில் ஹட்டன்  பௌத்த வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் -  டிக்கோயா, ஹன்பீல்ட் தோட்டத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொண்ட 25 வயதுடைய சந்தேக நபர், மோட்டார் சைக்கிளை அதிவேகமாக செலுத்தி வந்துள்ளதுடன், இதன் போது வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி  மோட்டார் சைக்கிளில் மோதி பலத்த காயம் அடைந்ததையடுத்து சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில் பிரதேசவாசிகள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

சந்தேக நபர் கைது செய்யப்படும் போதும் மது போதையில் இருந்ததாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்  ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வீதிக்கு அருகில் அமைந்துள்ள பள்ளிவாசல் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்ஜித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .