Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பட்டிபொலயில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், அரநாயக்கவை சேர்ந்த சம்பத் சோமரத்ன (வயது 35) என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
அரநாயக்கவிலிருந்து நுவரெலியா-பட்டிபொல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த காரும், பட்டிபொலயில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதியே பலியாகியுள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இருவாகனங்களில் பயணித்தவர்களும், பட்டிபொலயிலுள்ள உலகமுடிவை பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இரு வாகனங்களும் வேகத்தைக் கட்டுப்படுத்தமால் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காரின் சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago