Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, டி.கேதீஸ், எஸ்.கிருஸ்ணா
ஹட்டன் - நுவரெலியா A7 பிரதான வீதி, தலவாக்கலை மிடில்டன் கடைத்தொகுதிக்கு முன்பாக நேற்று (14) 8 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியானதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடக்க முயன்ற ஒருவர் மீது மோதியதில் படுகாயமடைந்த நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிகச் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.
விபத்தில் தலவாக்கலை- நானுஓயா தோட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் தியாகராஜா (வயது 43) என்பவரே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago